தமிழகத்தின் அரசியல் மாற்றாக இளைஞர் ஆட்சி அமைப்பது
தமிழகம் சென்னை மாகாணத்திலிருந்து தமிழகம் மாநிலமாக உருவெடுத்தது வரை எத்தனையோ அரசியல் மாற்றங்களை உள்ளடக்கி உருவாக்கி நம் நாட்டிற்கு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.

உங்களை வரவேற்கிறோம்
எல்லாருக்கும் எல்லாமும் இருக்க வேண்டும்!
இல்லாமை இல்லாமல் இருக்க வேண்டும்.
இளைஞர்களை அரசியலில் முதன்மை படுத்துவது.. உலகில் பல சாதனைகள் இளைஞர்களால் சாதிக்கப்பட்டது அரசியலிலும் அத்தகைய சாதனை படைக்க இளைஞர்களை அரசியல் படுத்துவது
தமிழகம் சென்னை மாகாணத்திலிருந்து தமிழகம் மாநிலமாக உருவெடுத்தது வரை எத்தனையோ அரசியல் மாற்றங்களை உள்ளடக்கி உருவாக்கி நம் நாட்டிற்கு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.
தமிழகத்தை சிறந்த மகிழ்ச்சியான முதன்மை மாநிலமாக மாற்றுவது அது என்ன? மகிழ்ச்சியான முதன்மை ஒரு மாநிலத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சியை அடைய வேண்டுமெனில்!
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் முக்கிய நோக்கமே தொழில் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தி மக்களை தன்னிறைவு அடையச் செய்வதாகும்.
போராட்டம் என்பது ஒரு 'கொடிய நோய்'. என்று ஒரு அரசாங்கம் தன் மக்களை போராடும் நிலைக்கு கொண்டு செல்கின்றதோ?
மனிதன் மிருகமாக இருந்தபொழுது ஒன்றாக வாழ்ந்தான். என்று மனிதனுக்கு சிந்திக்கும் அறிவும் செயல்படுத்தும் எண்ணமும் தோன்றியதோ?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தையாக போற்றப்படும் டாக்டர்.பாபா சாகேப். அம்பேத்கர் இந்திய மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கல்வியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை சட்ட புத்தகமாக 1950 ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தில் தொகுத்து திரு ஜவகர்லால் நேரு அவர்களால் சட்டமாக இயற்றப்பட்டது.

நெஞ்சுரைக்கும் வீரமும், மண்டியிடாத மானமும், விவசாயத்தை விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடு சமமாக வளர்க்கும் உத்தியும், அறிவியலில் புதியதோர் புரட்சியும் செய்யக்கூடிய ஆற்றலும் இளைஞர்களிடம் உள்ளது என்பதை நம் முன்னோர்கள் கணித்து இளைஞர்களே இந்த நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் சக்தி என்று குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கூற்றினை நாம் நிறைவேற்றவே இங்கு களம் காண்கின்றோம். நம் முன்னோர்கள் கூறியது பொய்யாகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்றது தான் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி. அந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவானதே நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி.


எங்கள் கொடியின் மஞ்சள் நிறம் மஞ்சளைக் குறிக்கிறது, இது சக்திவாய்ந்த எதிர்-வைரஸ் மற்றும் எதிர்-பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போல, நாங்கள் ஜனநாயகத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க கெட்ட மற்றும் தீங்கு விளைவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக செயல்பட அரசியலில் நுழைகிறோம்.
எங்கள் கொடியின் மஞ்சள் நிறம் ஊழல், நீதியின்மை மற்றும் மோசமான ஆட்சிக்கு எதிராக போராடும் எங்கள் உறுதியைக் குறிக்கிறது. சுத்தப்படுத்தி பாதுகாக்கும் மஞ்சளைப் போல, நாங்கள் அரசியலை சுத்தப்படுத்தி மக்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியாக உள்ளோம்.
எங்கள் கட்சி கொடியில் உள்ள காளைக்கொம்பு வரலாற்று ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து எங்கள் கட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது மக்கள் இயக்கத்தில் எங்கள் வேர்களை மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் எங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எங்கள் உறுதியைக் குறிக்கிறது. கொம்பு வலிமை, தைரியம் மற்றும் நீதிக்காக போராடும் எங்கள் தளராத உறுதியின் குறியீடாக நிற்கிறது.
“இந்த நாடு வல்லரசு என்ற நிலையை அடைய வேண்டுமெனில் அது இளைஞர்கள் கையில் உள்ளது”— டாக்டர். அப்துல் கலாம்